பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி, முட்டை விலை உயர வாய்ப்பு. - Global Tamil Voice உலக தமிழ் குரல்

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி, முட்டை விலை உயர வாய்ப்பு.




சோளத்தை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்குவதில் ஏற்படும் தாமதம் காரணமாக, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரிக்கக்கூடும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அந்தச் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர, கால்நடை தீவனத்திற்காக சோளத்துக்குப் பதிலாக அரிசியைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி வேகமாகக் குறைந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் சோளத் தட்டுப்பாடு காரணமாக, சிறிய அளவிலான பண்ணையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களில் சுமார் 20 சதவீதமானோர் ஏற்கனவே இந்தத் தொழிலில் இருந்து விலகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சோள இறக்குமதிக்கான அனுமதி வழங்குவதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டால், உற்பத்திச் செலவு மேலும் அதிகரிப்பதுடன், அதன் தாக்கம் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் சந்தை விலையிலும் ஏற்படக்கூடும் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

About GTV